சென்னை/டெல்லி: நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார். அவரது புதிய கட்சியை ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக அவரது புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் இன்று புஸ்ஸி ஆனந்து தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கட்சிப் பெயரை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் விஜய் 2009ம் ஆண்டு நற்பணி மற்றும் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் எதும் செய்யாமல் இருந்த நடிகர் விஜய், சமீபகாலமாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை அந்த இயக்கத்தின் மூலமாக செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில்,கடந்த 25ம் தேதி திடீர் என சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய், ஆலோசனை நடத்தினார். வருகிற தேர்தல் குறித்து ஆலோசனை நடந்ததாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார். சுமார் 2மணி நேரங்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கத்தை முதலில் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதலில் கட்சி பெயரை பதிவு செய்து விட்டு அதன் பின்னர், ஒரு மாத காலத்திற்குள் கட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு குழு பிப் 4ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இன்றே இக்குழு டெல்லி சென்றிருந்தது. அங்கு கட்சியைப் பதிவு செய்தது.
இதையடுத்து முறைப்படி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் விஜய்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்களிடையை பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}