சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழாத வண்ணம் திமுக தலைமை கவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் சிறிய அளவிலான இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கான இலாகாக்கள் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில்கள் துறையையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் துறை டாக்டர் கே.பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் வனம் மற்றும் காதி துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}