தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

Oct 23, 2025,06:08 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு என 3 வேளை இலவச உணவு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.


தூய்மை பணியாளர்களுக்கு கட்டணமில்லாமல் 3 வேளை உணவு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளிலும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. சென்னையில் காலை 5:30 மணி முதல் 6:00 மணி வரையில், 166 இடங்களில், மதிய உணவானது 1:30 மணி முதல் 2:00 மணி வரையிலும் 285 இடங்களிலும், மேலும் இரவு உணவு 9:30 முதல் 10:00 மணி வரையிலும் வழங்கப்படும். இந்த உணவுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வழங்கபட உள்ளது. இதற்காக 186 கோடியே 94 லட்சத்தி 22,969 ரூபாய் செலவிடபட உள்ளது. 




முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதன்படி சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 29, 455 தூய்மை பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட உள்ளது. மூன்று சிப்டுகள் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு உணவு வழங்க 186 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி காலை உணவு 5,159 பேருக்கும், மதிய உணவு 22,886 பேருக்கும், இரவு உணவு 1410 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உணவு வழங்க தேர்வு செய்யப்படும் நிறுவனம் உணவு தயாரித்தல் தொடங்கி விநியோகம் வரை அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எப்எஸ்எஸ்ஐ சான்று அதன் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், திட்ட ஆலோசகரை நியமித்து இதை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்