தமிழக அரசின் திரை விருதுகள்... சிறந்த நடிகர் மாதவன் - நடிகை ஜோதிகா.. தனிஒருவனுக்கும் விருது

Mar 04, 2024,10:43 PM IST

சென்னை : 2015ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் இன்று (மார்ச் 04) அறிவிக்கப்பட்டுள்ளன. விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்களின் பட்டியல் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 


விருதிற்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மார்ச் 06ம் தேதி மாலை சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.எம்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்க உள்ளார். விருதிற்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியன வழங்கப்பட உள்ளன.




விருது பெற்ற படங்களின் விபரம் :


சிறந்த படம் முதல் பரிசு - தனி ஒருவன்

சிறந்த படம் 2வது பரிசு - பசங்க 2

சிறந்த படம் 3வது பரிசு - பிரபா

சிறந்த படம் சிறப்பு பரிசு - இறுதிச்சுற்று

பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - 36 வயதினிலே

சிறந்த நடிகர் - ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)

சிறந்த நடிகை - ஜோதிகா (36 வயதினிலே)

சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கெளதம் கார்த்திக் (வை ராஜா வை)

சிறந்த நடிகை சிறப்பு பரிசு - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

சிறந்த வில்லன் நடிகர் - அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)

சிறந்த நகைச்சுவை நடிகை - தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம், 36 வயதினிலே)

சிறந்த குணச்சித்திர நடிகர் - தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)

சிறந்த குணச்சித்திர நடிகை - கவுதமி (பாபநாசம்)

சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)

சிறந்த கதையாசிரியர் - மோகன் ராஜா (தனி ஒருவன்)

சிறந்த உரையாடலாசிரியர் - இரா.சரவணன் (கத்துக்குட்டி)

சிறந்த இசையமைப்பாளர் - ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்)

சிறந்த பின்னணி பாடகர் - கானா பாலா (வை ராஜா வை)

சிறந்த பின்னணி பாடகி - கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)

சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி (தனி ஒருவன்)

சிறந்த ஒலிப்பதிவாளர் - ஏ.எல்.துக்காராம், ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)

சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) - கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - பிரபாகரன் (பசங்க 2)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - ரமேஷ் (உத்தம வில்லன்)

சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (தனி ஒருவன்)

சிறந்த ஒப்பகைக் கலைஞர் - சபரி கிரீஷன் (36 வயதினிலே,இறுதிச்சுற்று)

சிறந்த தையற் கலைஞர் - வாசகி பாஸ்கர் (மாயா)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - மாஸ்டர் நிஷேஸ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)

சிறந்த பின்னணிக்குரல் (ஆண்) - கெளதம் குமார் (36 வயதினிலே)

சிறந்த பின்னணிக்குரல் (பெண்) - ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்