தமிழ்நாடு அரசு தீவிரம்.. வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த தகவல் சேகரிப்பு வேகம் பிடிக்கிறது!

Mar 07, 2023,03:03 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த தகவல் சேகரிப்பு வேகம் பிடித்துள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் கூறி பீகார், உத்தரப் பிரதேசத்தில் சில விஷமிகள் வதந்தி பரப்பி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தினர். இரு மாநில மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான இந்த செயல் நாட்டு மக்களை அதிர வைத்து விட்டது.



இது முற்றிலும் வதந்தி என்பதை உடனடியாக தமிழ்நாடு அரசும், பீகார் அரசும் தெளிவுபடுத்தி விட்டன. பேக்ட் செக் பத்திரிகையாளர் முகம்மது ஜூபைரும் இதுதொடர்பாக தொடர் டிவீட் போட்டு, வதந்தி பரப்பியவர்களை அம்பலப்படுத்தினார். இதனால் இந்த விவகாரம் தணிந்து வருகிறது.  மேலும் பீகாரிலிருந்து அரசு அதிகாரிகள் குழுவும், அரசியல்வாதியான சிராக் பாஸ்வானும் வந்து பார்த்துச் சென்றனர். அவர்களும் தமிழ்நாடு அரசுன் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்தனர். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரம் சேகரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், அனைத்து மாவட்டங்களிலும் தகவல் சேகரிக்கும் பணி வேகம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 லட்சம் பிற மாநிலத் தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் குறித்த டேட்டா பேஸ் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பிற மாநிலத்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவருக்கும் உரிய பாதுகாப்பு தரப்படுகிறது. அதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது.  பீகாரிலிருந்து வந்த 5 உறுப்பினர் குழு தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில்தான் அதிக அளவிலான பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு கலெக்டர்களே நேரடியாக கணக்கெடுக்கும் பணியை கண்காணித்து வருகின்றனர் என்றார் கணேசன்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்