சென்னை: திருவள்ளுவர் காவி உடையில் நெற்றி நிறைய விபூதியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தைப் போட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த டிவீட் சலலசப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று திருவள்ளுவர் தினமாகும். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று மதுக் கடைகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு வாழ்த்து வெளியிட்டுள்ளார். அது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த டிவீட்டில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. நெற்றியிலும், கையிலும் விபூதிப் பட்டையுடன் கூடிய இந்து மத துறவியின் தோற்றத்தில் திருவள்ளுவர் காட்சி தருகிறார்.
அதில் ஆளுநர் ஆர். என். ரவி கூறியிருப்பதாவது: திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆளுநர்.
திருவள்ளுவர் தமிழ்ப் பெரும்புலவராக கொண்டாடப்படுவர். மதம் தாண்டி, அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படுவர். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் ஒரு குறளில் கூட கடவுள் குறித்தோ, மதம் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால்தான் இவர் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவராக கருதப்படுகிறார். சைவர்கள் இவரை தங்களது நெறியைச் சேர்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடுவது வழக்கம்.. அதேபோல சமண மார்க்கத்தினரும், இவரது குறள் நெறிகள், சமண மதத்தைச் சார்ந்தவை என்று கூறுவது வழக்கம்.
இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் வள்ளுவரை இழுக்க முயன்றாலும், அனைத்துத் தமிழர்களின் பெரும்புலவராகவே திருவள்ளுவர் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் வள்ளுவரை, சனானத துறவி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வர்ணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}