சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு ரூ.730 கோடி குத்தகை வாடகை பாக்கி செலுத்தாதது காரணமாக நான்கு வாயிலகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1945ம் ஆண்டு முதல் சென்னை கிண்டில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு 160 ஏக்கர் நிலத்தை அரசு குத்தகை அடிப்படையில் வழங்கியது. 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது, வரும் 2044ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. குத்தகை தொகையாக ஆண்டுக்கு ரூ.614 .13 காசுகள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 1970ம் ஆண்டு வாடகையை உயர்த்துவது தொடர்பாக கிண்டி வட்டாட்சியர் அலுவலகம் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் ஓப்பந்தத்தில் எதுவும் சேர்க்கப்படவில்லை என கூறியது.

இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், 1970 முதல் 2004ம் ஆண்டு வரையிலான ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 குத்தகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தற்போது அங்கு நடைபெறும் செயல்களில் எந்த பொது நலனும் இல்லை. இந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக அரசு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வாடகை பாக்கியை செலுத்த தவறியதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலை கிண்டி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர். அத்துடன் அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}