சூப்பர் நியூஸ்... பள்ளி மேலாண்மை குழுக்களில்.. 4 முன்னாள் மாணவர்களை சேர்க்க. தமிழக அரசு முடிவு!

Jul 01, 2024,11:09 AM IST
சென்னை: பள்ளி மேலாண்மை குழுக்களில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் குழுவினர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 4 முன்னாள் மாணவர்களையும் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தற்போது 20 பேராக உள்ள இந்தக் குழுவானது இனி 24 பேராக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டன. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் எஸ் எம் சி எனப்படும் பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் குழுவில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என மொத்தம் 20 பேர் கொண்ட குழுக்களாக அமைக்கப்பட்டது.



இந்த 20 பேரில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டையும், குழந்தைகளின் வளர்ச்சியையும் கண்காணிப்பதே இதன் நோக்கமாகும். முதலில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. பின்னர் இந்த குழுகள் 2021 முதல் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வரையிலான வகுப்புகளைக் கொண்ட 37, 500 அரசு பள்ளிகளில் இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை பள்ளிக்கு வந்து பார்வையிட வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை என்ன, தேவையான வசதிகள் என்ன என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ள வேண்டும். இந்த கல்வி மேலாண் குழு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும். 

அதன்படி ஜூலை  2022 முதல் 2024 மே வரை அரசுப் பள்ளிகளின் மேலாண்மை குழு கூட்டங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வந்தன. ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இந்த அரசு பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு உள்ளது.

இந்த நிலையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் என 20 பேர் கொண்ட குழுவில், கூடுதலாக முன்னாள் மாணவர்கள் நான்கு பேரையும் சேர்த்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி 20 பேர் கொண்ட இந்த குழுவின் எண்ணிக்கையை தற்போது 24 ஆக உயர இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்