தமிழின் பெயரால், கடவுளறிய, அரசியல் சாசனத்தின் மீது.. தமிழ்நாட்டு எம்.பிக்கள் பதவியேற்பு உறுதிமொழி!

Jun 25, 2024,06:22 PM IST

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நேற்று பரபரப்பாக தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாட்டை சேர்ந்த 39 நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களும் பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.


18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்  நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எம்பிக்கள் பதவியேற்பு நடந்தது. முதலில் பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பல்வேறு எம்.பிக்கள் பதவியேற்றனர். நேற்று ஒரே நாளில் 240 எம்பிக்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


முதல் நாளிலேயே லோக்சபாவில் அமளி துமளியாக இருந்தது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை வேறு  இடத்திற்கு மாற்றியதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவையிலும் அவர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர். முதல் நாளிலேயே கூச்சல் குழப்பத்தோடு ஆரம்பித்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் நாட்களில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.




இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களும் பதவியேற்றனர். பிற்பகல் 1 மணியிலிருந்து தமிழ்நாட்டு எம்.பிக்கள் உறுதிமொழி ஏற்றனர்.  முதலில் சசிகாந்த் செந்தில், டாக்டர் கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர் பாலு, ஜி செல்வம், எஸ்.  ஜெகத்ரட்சகன், டி.எம் கதிர் ஆனந்த், கே. கோபிநாத், ஏ மணி, சி. என் அண்ணாதுரை, எம். எஸ் தரணி வேந்தன், டி ரவிக்குமார், டி மலையரசன் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.


அவர்களைத் தொடர்ந்து டி.எம் செல்வகணபதி, பி.எஸ் மாதேஸ்வரன், கே.இ பிரகாஷ், கே.சுப்பராயன், ஆ ராசா, பி.கணபதி ராஜ்குமார், கே.ஈஸ்வர சுவாமி, ஆர். சச்சிதானந்தம், எஸ். ஜோதிமணி, துரை வைகோ, அருண் நேரு, எம்.கே விஷ்ணு பிரசாத், திருமாவளவன், ஆர். சுதா உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.




இதேபோல வி. செல்வராஜ், எஸ் முரசொலி, கார்த்தி பி.சிதம்பரம், சு. வெங்கடேசன், தங்க தமிழ்செல்வன், பி.மாணிக்கம் தாகூர், கே. நவாஸ் கனி, கனிமொழி கருணாநிதி, டாக்டர். ராணி ஸ்ரீகுமார், ராபர்ட் ப்ரூஸ், விஜய் வசந்த் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.


அனைத்து தமிழ்நாட்டு எம்.பிக்களும் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். பலரும் தமிழின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர். மயிலாடுதுறை எம்.பி. சுதா, தமிழ்க் கடவுள் முருகன் பெயரால் உறுதிமொழி ஏற்றார். 2வது முறையாக எம்.பியாகியுள்ள கனிமொழி, உளமாற என்று கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்