சென்னை: தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாகவும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 21ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. நவம்பர் 23ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தொடர்ந்து இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது .
சென்னை மழை:
சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீன் பிடிக்க தடை:
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25ஆம் தேதி:
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!
கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!
அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!
ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்
{{comments.comment}}