சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளை 3 மாவட்டங்களுக்கும், நாளை மறு நாள் 2 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று இரவு முதல் நாளை நாளை மறுநாள் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வந்து விட்டது.
தென்கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருந்த நிலையில் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே 980 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 1050 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
ரெட் அலர்ட்
இது அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு இலங்கை கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததால் தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை நாளை மறுநாள் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
நாளை மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறு நாள், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது.
இன்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் கன மழை
இன்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக மழை தீவிரமடையும். குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் காரைக்காலில் இன்று இரவு முதல் கனமழை தொடங்கி, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் குறைந்த நேரத்திலேயே டெல்டா கடலோரப் பகுதிகளில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து சென்னை எண்ணூர், நாகை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}