சென்னை: ஒரு நாள் திருப்பதி சுற்றுலா திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 400 நபர்கள் வீதம் திருப்பதிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து தினசரி லட்ச்சக்கனக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக சென்னையிலிருந்து தினசரி ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்துதான் திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தின் மூலமாக திருப்பதிக்கு தினசரி 400 நபர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த சுற்றுலாத்துறையின் அறிக்கை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலமான சுற்றுலா வளாகத்தில் இருந்து தினசரி காலை 4:30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.
ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய சீட்டின் மூலம் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதியில் லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது. மேலும் மதிய உணவுக்கு பின் திருச்சானூர் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் www.ttdcoline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தொலைபேசி எண்கள் 044- 25333333 மற்றும் 044- 25333444 தொடர்பு கொண்டு பெறலாம் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}