சென்னை: சென்னை முதல் தஞ்சாவூர் வரை இன்று இரவு முதல் நாளை காலை வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 25ம் தேதி வரை பரவலாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்த மழை இன்று இரவும் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு முதல் மறு நாள் காலை வரை பரவலாக மழை இருக்கும். பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருவண்மாமலை, தஞ்சாவூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கும்.
ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய மலை வாசஸ்தலங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்புண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}