சென்னை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும், வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்திற்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி முழுக் கொள்ளளவை எட்டும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கே எஸ் ஆர் அணை நேற்று முழு கொள்ளளவை எட்டியது. இதனால் நீரின் வெளியேற்றம் அதிகரித்து ஒகேனக்கல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இருப்பினும் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் காவிரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது வினாடிக்கு 60,771 கன அடியில் இருந்து தற்போது 33,040 கனடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.85 அடியில் இருந்து தற்போது 89.31 கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 51.86 டிஎம்சி ஆக உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியை நெருங்கும் நிலையில், வரும் நாட்களில் காவிரி பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து 120 அடியை எட்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். குறிப்பாக குடகு, சிக்மகளூரு, வயநாடு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கன மழை தொடர வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுதந்திர தினத்திற்குள் 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது. அதேபோல் வால்பாறை நீலகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு:
சென்னை,திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே மழையை எதிர்பார்க்கலாம். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை.
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
{{comments.comment}}