- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு பெரிதாக கன மழை இருக்காது. கிறிஸ்துமஸ் தினத்தன்று லேசான அல்லது மிதமான மழை இருக்கும். யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி வரை நீடிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் போட்டுள்ள டிவீட்டில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை எதுவும் இருக்காது. கிறிஸ்துமஸ் அன்று லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மிதமான மழைப்பொழிவு இருக்கும். இது ஜாலியான மழையாகவே இருக்கும், என்ஜாய் பண்ணக் கூடியதாக இருக்கும். மக்களை கஷ்டப்படுத்தும் வகையில் இருக்காது.
டிசம்பர் 27 இல் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையில் மிக பலத்த மழை பெய்யும் என ஒரு ஆடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். இது தவறான கணிப்பு. இந்த ஆடியோவை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான கருத்து.
வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் அதாவது ஜனவரி வரை பரவலாக நீடிக்கக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பிறகென்னப்பா.. கிறிஸ்துமஸையும், நியூ இயரையும் தடபுடலா கொண்டாட ரெடியாகுங்க!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}