Rain Safety.. மழைக்காலம்.. கவனமா இருங்க.. இந்த நம்பரைத் தொடர்பு கொள்ளுங்க.. மின்வாரியம் அறிவுறுத்தல்

Oct 12, 2024,05:26 PM IST

சென்னை:   மழைக்காலம் வந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கன மழை, மிக கன மழை எச்சரிக்கையும் வந்து விட்டது. அடுத்து வட கிழக்குப் பருவ மழையும் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


மழைக்காலம் வந்து விட்டாலே பெரிய அளவில் நாம் சந்திக்கும் பிரச்சினை மின்கசிவு மற்றும் மின்சார ஷாக் பிரச்சினைகள்தான். மழைக்காலத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விடும் சம்பவங்கள் அதிகம் நடக்கும். அதேபோல சுவிட்ச் போர்டுகளில் மின் கசிவு ஏற்படவும் வாய்ப்புண்டு. இதுபோன்ற சமயத்தில் நாம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.


இதுதொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை டான்ஜெட்கோ மக்களுக்கு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக டான்ஜெட்கோ வழங்கியுள்ள அட்வைஸரி குறித்துப் பார்ப்போம்.




- மழை பெய்யும் போது கவனமாக செல்லவும். மின் கம்பிகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும். பாதுகாப்பாக இருங்கள். அறுந்து விழுந்த மின் கம்பிகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். உடனே மின் வாரியத்தை தொடர்பு கொள்ளவும்: 9498794987


- மழை காலத்தில் மின் கசிவை தவிர்க்க,  30mA RCD/ RCCB ஐ  இன்றே உங்கள் வீட்டில் மின் திறனாளரைக் கொண்டு பொருத்துங்கள். இது உங்களை மின் கசிவில் இருந்து பாதுகாத்து, மின் உயிரிழப்புகளைத்  தடுக்கும்.


- பழுதடைந்துள்ள அல்லது லூஸ் காண்டாக்ட்டாக உள்ள ஸ்விட்சகள், கேபிள்களை உடனடியாக மாற்றி           விடுங்கள்.


- உங்களது வீட்டில் பவர் எர்த்திங் சரியாக கொடுக்கப்படிராவிட்டால் அதை உடனடியாக செய்து முடியுங்கள்.


- உங்களது தெருவில் உள்ள அல்லது உங்கள் கண்ணில் படும் பழுதடைந்த மின்கம்பங்கள், மின் பெட்டிகள் அருகே செல்லாதீர்கள். உடனடியாக உரிய அதிகாரிகளுக்குப் புகார் அளியுங்கள்.


இவை மட்டுமல்லாமல் நாமும் கூட பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே முன்கூட்டியே  செய்வது எப்போதுமே நல்லதுதான். 


மழைக்காலத்தில் மின் அழுத்தம் திடீரென அதிகரிக்கும் சம்வங்கள் நடைபெறுவது இயல்புதான். அதுபோன்ற சமயத்தில் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கன மழை பெய்யும் சமயத்திலும், இடி மின்னல் நிலவம் சமயத்திலும் மின்சார சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். முடிந்தால் பிளக்குகளை கழற்றி விடவும். இடி, மழை , மின்னல் நின்றவுடன் மீண்டும் பயன்படுத்தலாம். குறிப்பாக டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை இடி, மின்னல் சமயத்தில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.


வீட்டுக்குள் சுவிட்ச் போர்ட் அருகில் உள்ள சுவர்களில் ஈரத்தன்மை ஏற்படுகிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால் சுவரில் தண்ணீர் கசிகிறது என்று அர்த்தம். இதை சரிசெய்வது முக்கியம். இல்லாவிட்டால் ஷாக் அடிக்கும் வாய்பபுண்டு. உரிய ஒயர்மேனைக் கூப்பிட்டு அந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். அதேபோல மாடியில் வாட்டர் லீக்கேஜ் மற்றும் சீப்பேஜ் இருந்தால் அதையும் சரி செய்வது முக்கியம்.


வீட்டில் தோட்டம் இருந்தால், அதில் விளக்கு வசதிகள் செய்திருந்தால் அவற்றையும் ஒருமுறை சரி பார்த்து விடவும், பழுதடைந்த கேபிள்கள் இருந்தால், பல்பு மாட்டும் பகுதியில் ஏதாவது உடைந்திருந்தால், சுவிட்ச் போர்டு சரியில்லாமல் இருந்தால் அதை மழைக்காலத்துக்கு முன்பே சரி செய்து விடுவது அவசியம். 


வீட்டுக்குள் ஈரப்பதம் அதிகமாக தேங்கி விடாமல் இருக்க,  குறிப்பாக சுவர்களில் ஈரத்தன்மை அதிகரிக்காமல் இருக்க முடிந்தவரை நல்ல காற்றோட்டத்துடன் அறைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். வெயில் அடிக்கும்போது முடிந்தவரை கதவு, ஜன்னல்களை நன்றாக திறந்து வையுங்கள். 


மழைக்காலத்தில் கரண்ட் கட் அடிக்கடி வர வாய்ப்புண்டு. குறிப்பாக பெரு மழைக்காலத்தில், புயல் போன்ற காலத்தில் கரண்ட் போனால் மீண்டும் வர சில நாட்கள் கூட ஆகலாம். எனவே அதற்கேற்றார் போல அத்தியாவசியப் பொருட்களை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். யுபிஎஸ் வசதி இருந்தாலும் கூட சில மணி நேரங்களுக்கு மேல் அவற்றை பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.


மழைக்காலத்தில் பீதி அடையத் தேவையில்லை. மாறாக முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலே போதுமானது, எளிதாக சமாளிக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்