புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்று வாக்குப்பதிவு காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதனை அடுத்து லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் நான்காம் தேதியும், அனைத்து மதுக் கடைகளும் மூட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து டாஸ்மாக்களும் மூடப்படும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுவதை அடுத்து, புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அனைத்து வகையான மதுக் கடைகளும் மூட வேண்டும்.
வாக்குப்பதிவு நாளான ஜூன் நான்காம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}