நீங்க "குடிப்பீங்களா"?.. அப்ப உங்களுக்குத்தான் இந்த நியூஸ்!

Aug 12, 2023,07:13 PM IST
 சென்னை: சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வழக்கம் போல இந்த முறையும் வீடுகள், அலுவலகங்கள் தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுமாறு மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மக்களும் வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் வருகிற சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மணிப்பூர் கறை ஒரு பக்கம் மனதை வறுத்தினாலும், சுதந்திர தினம் மக்களிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாகவே உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுதந்திர தினத்தன்று மதுக் கடைகளையும், பார்களையும் மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் இது கண்டிப்பகா கடைப்பிடிக்க வேண்டும். யாராவது திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

15ம்  தேதி கடைகள் மூடப்படும் என்பதால் குடிக்கும் பழக்கம் உடையோர் 14ம் தேதி கடைகளை முற்றுகையிட்டு சரக்குகளை அதிக அளவில் வாங்குவார்கள் என்பதால் அன்றைய தினம், அதிக அளவிலான சரக்கு பாட்டில்களை இருப்பில் வைத்துக் கொள்ள மதுக் கடைகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்