Teachers Day: செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

Sep 04, 2025,11:50 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்டுகிறது. "அடுத்த தலைமுறை கற்பவர்களை ஊக்குவித்தல் "என்ற கருப்பொருள் (தீம்)2025, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தத்துவ ஞானிமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. "அடுத்த தலைமுறை கற்பவர்களை ஊக்குவித்தல் "என்கிற கருப்பொருள் எதிர்கால தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்களை வளர்ப்பதில் ஆசிரியர்கள்  வகிக்கும் முக்கியமான பங்கினை எடுத்துக்காட்டுகிறது.


கற்பவர்கள் மீது வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் மதிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் ஆசிரியர் தினம் ஆகும். முதன் முதலில் 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடும் பாரம்பரியம் தொடங்கியது. அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணனின் மாணவர்களும் நலம் விரும்பிகளும் அவருடைய பிறந்த நாளை கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்தனர். தனிப்பட்ட கொண்டாட்டத்திற்கு பதிலாக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நன்னாளை அர்ப்பணிக்க வேண்டும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பரிந்துரைத்தார்.




டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திருத்தணியில் பிறந்தார்.அவர் இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற நபர்களில் ஒருவராக மாறினார்.கல்வி மற்றும் ராஜதந்திர துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்த ஒரு சிறந்த இந்திய அறிஞர், தத்துவஞானி, மற்றும் அரசியல்வாதி ஆவார். இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற நபர்களில் ஒருவராக திகழ்ந்தார். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பணியாற்றினார்.மேலும் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான "பாரத ரத்னா" விருது பெற்றவர்.


அவர் கல்கத்தா பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பித்தார். இவர் ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் துணைத் தலைவராகவும், 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாம் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய கல்விக்கான சிந்தனைகள் மற்றும் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.


ஆசிரியர் தின கொண்டாட்டங்கள்:




உலக ஆசிரியர் தின மரபுகள் உலகம் முழுவதும் வேறுபடுகின்றன. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் ஞானத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் சிறப்பையும் பங்களிப்பையும் கொண்டாடப்படும் விதமாக விருதுகள் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி,கல்லூரிகளில் அவர்களுக்கு பரிசுகள் அட்டைகள், மலர் அலங்காரங்கள் வழங்குதல்,மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.


ஆசிரியர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பிரபலமான வழிகள், மனமார்ந்த நன்றி அறிவிப்புகள் முதல் தனிப்பட்ட பரிசுகள் மற்றும் தொண்டு நன்கொடைகள் வரை உள்ளன. ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஆச்சரிய விருதுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆசிரியர்களைப் போல அலங்காரம் செய்தல், கல்வி விளையாட்டுகள், பாராட்டு காட்சிகள் மற்றும் கல்வியாளர்களால் போற்றப்படும் விருந்தினர் பேச்சாளர்களை அழைத்தல் என்று அனைத்து பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது.


ஆசிரியர் தின வாழ்த்துக்கள்: பாடப் புத்தகங்களை தாண்டி வாழ்க்கை பாடங்களை மாணவர்களுக்கு அன்புடன் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


கற்றலையும், கற்பித்தலையும் தங்கள் வாழ்க்கை பயணமாக நடத்தி வரும் சிறந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். ஆசிரியர்களின் பொறுமை, அர்ப்பணிப்பு, ஆர்வம்,உழைப்பு ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. சிறந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தென் தமிழ் சார்பாக "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்". தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!

news

அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?

news

Teachers Day: செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

news

GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி

news

GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 04, 2025... யோகம் தேடி வர போகுது

news

GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !

news

ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

அதிகம் பார்க்கும் செய்திகள்