இரட்டை இலையை எங்களுக்குக் கொடுங்க.. இல்லாட்டி முடக்குங்க.. ஓ.பி.எஸ். அதிரடி கடிதம்!

Mar 16, 2024,05:59 PM IST

சென்னை: இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் சின்னத்தை முடக்கிவிட்டு எங்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் தனிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.


அதிமுகவில், பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு முடிவெடுக்க வேண்டும். வேட்பாளர்களுக்கான ஃபார்ம் ஏ,பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.


அவர் எழுதிய கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது: பன்னீர்செல்வமும், பழனிசாமியும் முதன்மை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி மற்றும் சட்டப்பூர்வப் பணிகளை ஆற்றி வருகின்றனர். இதற்கிடையில் 28-6-2022 அன்று, கே.பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்.  தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில், திருத்தப்பட்ட துணைச் சட்டங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகள் இணைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.



இதற்கிடையே கே.பழனிச்சாமியும்  அவரது ஆதரவாளர்களும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி 11-7-2022 சட்டவிரோத பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பல்வேறு சட்டவிரோத தீர்மானங்களை நிறைவேற்றி அதன் விளைவாக அவரே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சிவில் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளன.


அந்தத் தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சிவில் நீதிமன்றத்தால் இன்று வரை இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது வரை தேர்தல் ஆணையத்தாலோ சிவில் நீதிமன்றத்தாலோ எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.


தற்போதைய  நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி ஒருங்கிணைப்பாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும், பழனிசாமியும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்,  எங்களின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்காத நிலையில், இரட்டை இலை சின்னம் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.


எனவே தேர்தல் ஆணையம் இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனடியாக தலையிட்டு, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, வரும் தேர்தலில் திறம்பட பங்கேற்கும் வகையில், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட அனுமதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்