(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவார்கள்.. தமிழிசை செளந்தரராஜன் ஆவேசம்

Dec 27, 2023,05:54 PM IST

புதுச்சேரி: தூத்துக்குடி மக்களின் துயரத்தைக் கண்டு துயருற்று துடிதுடித்துக் கொண்டிருக்கும் மக்களின் குரலாய்ப் பேசியதற்காக தன்னை குத்திக் கிழித்து காயப்படுத்தி வருவோரின் ஆணவ சாம்ராஜ்ஜியம் சரியப் போகிறது.. உங்களின் சரியும் சரித்திரத்தை எழுதத் தயார் என்று புதுச்சேரி துணை நிலை மற்றும் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கூறியுள்ளார்.


இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் ஏராளமான பாஜகவினரும் உடன் சென்றிருந்தனர். பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து விட்டது. திாரவிட மாடல் திண்டாடும் மாடலாகி விட்டது என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.




இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழிசை ஆளுநராக இருக்கிறார். அவர் அந்த வேலையை மட்டும் பார்க்கட்டும். அரசியல்வாதியாக ஆசைப்படுகிறார் என்றால் தூத்துக்குடி மக்கள் ஏற்கனவே அவருக்கு பரிசளித்து விட்டனர் என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில் மிகவும் ஆவேசமாக ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆளுநர் தமிழிசை. அந்த டிவீட்:


தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு...

திண்டாடும் மாடலை வைத்து.... திண்டாடிக் கொண்டிருப்பவர்கள்,என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்...


அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது... சரியப்போகிறது...


இது சபதம்!


அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்...

ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...


(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள்....


சமூகத்திலும் காயப்படுத்துங்கள்..... 

அந்த ரத்தத்தில் தோய்த்து....

நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்.....


இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம் என்று காட்டமாக கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.


திமுகவினர் குறித்து மறைமுகமாக டாக்டர் தமிழிசை போட்டுள்ள இந்த டிவீட்டும், சபதம் ஏற்பதாக அவர் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்