ஹைதராபாத்: தெலங்கானாவில் கணவனைக் காதலித்த மாற்றுத்திறனாளி பெண்ணை, அவருக்கே திருமணம் செய்து வைத்து ஆசிர்வதித்துள்ளார் ஒரு மனைவி. இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனைவியா என்று பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடுரு மண்டலம் உக்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சரிதா என்னும் பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. சுரேஷ்-சரிதா தம்பதியினர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த சுரேஷ்- சரிதா வாழ்க்கையில் குறுக்கிட்டார் சுரேஷின் மாமன் மகள் சந்தியா. அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

தனது மாமாவை காதலிப்பதாக, சந்தியா இது குறித்து சரிதாவிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கணவரிடம் விசாரித்த சரிதா, தனது கணவரும் சந்தியாவைக் காதலிப்பதை அறிந்தார். இருவரும் காதலிப்பதை அறிந்து கொண்ட சரிதா, சற்றும் யோசிக்காமல் இருவருக்கும் மணம் முடித்து வைக்க முடிவெடுத்தார். சந்தியாவின் நிலையை உணர்ந்து இந்த முடிவுக்கு அவர் வந்தார். இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்து, சந்தியாவுக்கும் தனது கணவருக்கும், மனைவி சரிதாவே முன்னின்று திருமணம் முடிந்து வைத்துள்ளார்.
இது குறித்து சரிதா கூறுகையில், மாற்று திறனாளியான சந்தியா என்னுடைய கணவர் மீது ஆசைப்பட்டார். மனிதாபிமானத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். முக்கியமாக, மாற்றுதிறனாளியான சந்தியாவை நல்லபடியாக பார்த்து கொள்ளவே என்னுடைய கணவருக்கு திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த திருமணம் சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. பலர் சரிதாவை புகழ்ந்தும், அதேசமயம், பலர் சரிதாவின் செயலை நினைத்து வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாண்டண்ணா கதையையும் படிச்சுட்டுப் போங்க

இதே போல ஆந்திர மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இந்தக் கதை ரொம்ப வித்தியாசமானது.
ஆந்திர மாநிலம் அல்லூரீ சீதாராம ராஜூ மாவட்டம் கின்சூரு பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவருக்கு கடந்த 2000ம் ஆண்டில் சாகேனி பர்வதம்மாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வது திருமணம் செய்ய முடிவு செய்த பாண்டண்ணா, இதுகுறித்து மனைவி பர்வதம்மாவிடம் சொல்லியிருக்கிறார். முதல் மனைவியே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் முடித்து வைத்துள்ளார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2007ல் இந்தத் திருமணம் நடந்ததாம்.
பாண்டண்ணாவிற்கு தற்போது 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பாண்டண்ணாவிற்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. தனது 2 மனைவிகளிடம் அதை கூறியுள்ளார். 2 மனைவிகளுக்கும் தற்போது குழந்தை பெற்று கொள்ள முடியாது என்பதால், அதே ஊரில் வசிக்கும் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வைத்துள்ளனர் 2 மனைவிகள். கடந்த ஜூலை மாதம் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
பாண்டண்ணா.. போதும்ண்ணா.. பூமி தாங்காது.. அண்ணாவுக்கு மேலும் மேலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வராமல் இருக்க அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}