ஹைதராபாத்: இந்தியா உலகக் கோப்பையை வென்றால், விசாகப்பட்டனம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெலுங்கு நடிகை ரேகா போஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன.
இதில் இந்தியா இதுவரை 2 முறை ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலியா 5 முறை உலகக் கோப்பையை வென்ற அணியாகும். உலகக் கோப்பையை அதிகம் வென்ற அணி ஆஸ்திரேலியாதான். இந்த முறை ஆஸ்திரேலியா அணி சில தோல்விகளைச் சந்தித்து பின்னரே இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்துள்ளது.

மறுபக்கம், இந்தியா தான் ஆடிய அனைத்து சுற்றுப் போட்டிகளிலும் அட்டகாசமாக வெற்றி பெற்றது. அதேபோல அரை இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை பிரமாதமாக வீழ்த்திய பிறகே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தத் தொடரில் இந்தியா மட்டுமே ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத ஒரே அணியாகும்.
இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் என்பவர் கூறியுள்ள அதிரடி ஸ்டேட்மென்ட் பலரையும் நடுங்க வைத்துள்ளது. தெலுங்கில் கவர்ச்சிகரமான ரோல்களில் நடித்து வருபவர்தான் ரேகா போஜ். மாங்கல்யம், கலயச தஸ்மய் நமஹ, டாமினி வில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் போட்டிருந்தார்.
அதில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால் விசாகப்பட்டனத்தில் நிர்வாணமாக வலம் வர தயாராக இருக்கிறேன் என்று கூறியிரு்நதார். இது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. பலர் இதைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர். சிலர் நாங்க பார்க்க ரெடி என்று குசும்பாக கூறியிருந்தனர்.
இப்படித்தான் 2011ம் ஆண்டு பூனம் பாண்டேவும், இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறியிருந்தார். அதுவும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் தனது டிவீட் குறித்து ரேகா கூறுகையில், இந்தியா மீதான அன்பு, இந்திய அணி மீதான நம்பிக்கை காரணமாகத்தான் அப்படிக் கூறினேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. இதை தவறாகப் பார்க்காதீர்கள் என்று விளக்கியுள்ளார்.
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
{{comments.comment}}