"ஆதித்யா எல்1".. திரும்பிப் பார்க்க வைத்த "பெண் சூரியன்".. யார் இந்த நிகர் ஷாஜி!

Sep 02, 2023,04:44 PM IST
சென்னை: விண்ணை அளக்க ஆரம்பித்துள்ளது இந்தியா. ஒரு பக்கம் சந்திரனைத் தொட்ட நிலையில், மறுபக்கம் சூரியனையும் விட்டு வைப்பதில்லை என்ற முடிவோடு ஆதித்யா எல் 1 விண்கலத்தை செலுத்தியுள்ளது.. இங்குதான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஆச்சரியப்படுத்தியுள்ளது ஒரு பெண் சூரியன்.

அவர்தான் நிகர் ஷாஜி.. நம்ம ஊர் தென்காசியைச் சேர்ந்தவர். இந்த பெண் விஞ்ஞானிதான் ஆதித்யா எல் 1 திட்டத்தின் இயக்குநர் ஆவார். தொடர்ந்து இஸ்ரோவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே திட்ட இயக்குநர்களாக பணியாற்றுவது புதிய பெருமையாக அமைந்துள்ளது.

சந்திரயான் 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை, 2வது சந்திரயான் திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் வனிதா முத்தையா. சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் வீர முத்துவேல். இப்போது ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் நிகர் ஷாஜி இருந்துள்ளார்

யார் இந்த நிகர் ஷாஜி ?

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான் -சைத்தூன் பீவி ஆகியோரின் மகள்தான் நிகர் ஷாஜி.   செங்கோட்டையில் உள்ள எஸ் .ஆர். எம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக விளங்கினார். அதேபோன்று  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக விளங்கினார்.



நிகர் ஷாஜி தனது கல்லூரி படிப்பை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். 1987 ஆம்  ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார். நிகர் ஷாஜியின் சகோதரர் சேக் சலீமும் கூட ஒரு விஞ்ஞானிதான். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவருடைய தங்கை ஆஷா என்பவர் கேரளாவில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

நிகர் ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக  பணியாற்றி வருகிறார். இவரது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகிறார். மகள் தஸ்நீம் மங்களூரில் எம். எஸ் மருத்துவம் பயின்று கொண்டிருக்கிறார். நிகர் ஷாஜி தற்போது பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நிகர் ஷாஜி இஸ்ரோ பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் கடந்த போதும் ஆதித்யா எல் -1 திட்டத்திற்கு இஸ்ரோ அவரை திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டுக்காரர்களால் இஸ்ரோவுக்கும் பெருமை.. இவர்களால் இந்தியாவுக்கும் பெருமை என்பதோடு இப்போது தமிழ்நாட்டு பெண்களுக்கு வனிதா முத்தையாவைத் தொடர்ந்து மிகப் பெரிய ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார் நிகர் ஷாஜி என்பது பெருமைக்குரியது.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்