தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்

Sep 11, 2023,11:55 AM IST

சென்னை : ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போவதாக சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசானது. இந்த படம் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திங் ஜெயிலர் படத்தின் வசூல் உலக அளவில் கிட்டதட்ட ரூ.1000 கோடிகளை நெருங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து தனது 170 வது படத்திற்காக ரஜினி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தை டைரக்டர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.




அதற்கு பிறகு ரஜினி நடிக்க உள்ள தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பல மாதங்களாக தகவல் பரவி வந்தது. அதே சமயம் கைதி 2, ரோலக்ஸ் உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருந்து வருவதால் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள லியோ படத்திற்கு பிறகு அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. லியோ படத்திற்கு பிறகு பாலிவுட் படம் ஒன்றை லோகேஷ் இயக்க போவதாகவும், பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்க போவதாகவும் பல தகவல்கள் பரவி வந்தது.


இந்நிலையில் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் எழுதி, இயக்க போவதாக சன் பிக்சர்ஸ் இன்று போஸ்டர் வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போவதாகவும் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே தர்பார், அண்ணாத்த படங்களில் நடித்த ரஜினி 3வது முறையாக ஜெயிலர் படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.




தலைவர் 171 படம் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளதால் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்க போவதாகவும் ஒரு தகவல் அடிபட்டு வருவதால், இது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி - கமல் இணையும் படமாக இருக்குமா? ரசிகர்களின் நீண்ட கால ஆசையை லோகேஷ் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்