லியோ ஃபீவர் ஓவர்.. அடுத்து  "தளபதி 68"..  பாங்காக் பறப்பட்டார் விஜய்!

Nov 03, 2023,01:55 PM IST

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68வது படத்தின் படப்பிடிப்புக்காக பாங்காக் புறப்பட்டுச் சென்றார் நடிகர் விஜய்.


விஜய்யின் லியோ படம் ஏகப்பட்ட தட்டுமுட்டு சிக்கல்களுக்கு  மத்தியில் வெளியாகி ஒரு வழியாக வசூலையும் வாரிக் குவித்து விட்டு.. விஜய்யும் பட வெற்றி விழாவை தடபுடலாக முடித்து விட்டார். இப்போது அடுத்த வேலையில் அவர் மும்முரமாகியுள்ளார்.


வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்தின் வேலைகளில் தற்போது விஜய் பிசியாகி விட்டார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் நடிக்கும் 68வது படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ளது.  




தளபதி 68 படத்திற்கு விஜயதசமி அன்று பூஜை போடப்பட்டது.  இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு ஏற்கனவே அமெரிக்கா சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுகிறது. ஏற்கனவே தளபதி 68 படக்குழுவினர்  கடந்த 31ம் தேதி பாங்காக் சென்றனர். லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக விஜய் போகவில்லை. 


நேற்று முன்தினம் சென்னையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து இன்று  அதிகாலை தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பாங்காக் புறப்பட்டார் விஜய். 


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்  படத்தின் முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்