தளபதி 68..  பூஜை போட்டாச்சு.. அடடே அவரும் இருக்காரா படத்துல?.. குஷியில் ரசிகர்கள்!

Oct 24, 2023,02:53 PM IST
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்கி விட்டனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்  நடிக்கும் படம் இது. லியோ படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அடுத்து விஜய்யை இயக்க போவது யார் என்ற டாக் ஓடிக்கொண்டிருந்த நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

விஜய்யின் 68வது படத்தை வெட்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் 3டி விஎப்எக்ஸ் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.



பிரசாந்த், சினேகா, லைலா, பிரபுதேவா, வைபவ், அஜ்மல் அமீர், யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு காலத்தில் மைக்கும், கையுமாக பாடல் பாடி அந்தக் கால இளசுகளை வசீகரித்த மோகனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைகிறார். அதேபோல பிரேம்ஜி அமரன் விஜய்யுடன் நடிப்பதும் இதுவே முதல் முறையாகும். மறுபக்கம், யுவன் சங்கர் ராஜாவுடன்  2வது முறையாக விஜய் இணைகிறார். இதற்கு முன்னர் விஜய்யின் புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருந்தார்.  

வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் இப்படத்திற்கு தளபதி 68 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. லியோ பீவர் அடித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில், தற்பொழுது தளபதி 68 குறித்த பரபரப்பும் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டு விட்டது. இப்படம் எப்படி இருக்கும்,என்ன கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசத் துவங்கி விட்டன எனலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்