சென்னை: பாமக சார்பாக கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி பரவி வருவதற்கு,நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் கடலூர், ஆரணி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், ஆகிய ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. இந்த பட்டியலில் இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாக பொய்யான செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்டித்து தங்கர் பச்சான் கூறுகையில், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கூறினார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}