தர்மன் சண்முகரத்தினம்.. சிங்கப்பூர் புதிய அதிபராக இன்று பதவியேற்பு!

Sep 14, 2023,02:05 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று தமிழ் வம்சாவழியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார்.

ஆசிய நாடான சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். சிங்கப்பூரின் அதிபரான ஹலீமாவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில்  தமிழரான தர்மன் சண்முகரத்தினம் , இங்கொக் சொங் மற்றும் டாங்கின் லியோ ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் 70.4 சதவீத வாக்குகளுடன்  தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்.



தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 1957ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். இவரது தாத்தா மற்றும் பாட்டி சிங்கப்பூரில் குடியேறியவர்கள். இவரது தந்தை கனகரத்தினம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்.

வர்த்தகம் மற்றும் பொருளாதார நிபுணராக விளங்கியவர் தர்மன் சண்முக ரத்தினம். இவர் 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கல்வி மற்றும் நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியலை விட்டு விலகி வந்தார்.

சிங்கப்பூர் நாட்டின் ஒன்பதாவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் இன்று பதவி ஏற்கிறார் தர்மன் சண்முகரத்தினம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்