நடிப்பு!

Apr 29, 2026,03:06 PM IST

- மு. பாரதி 


நடிப்பு

ஒரு கலை


திரையில் 

நடிப்பு 

சிரிக்க வைக்கிறது 


திரையில் 

நடிப்பு 

சிந்திக்க வைக்கிறது 


திரையில் 

நடிப்பு 

பாட வைக்கிறது 




திரையில் 

நடிப்பு 

ஆட வைக்கிறது 


திரையில்

நடிப்பு 

நடிக்க வைக்கிறது


ஆனால் 

மனிதர்கள்


இன்று

புவியில்


நிஜத்தில் 

மற்றவர்களை

கீழே தள்ள

நல்லவர் போல்

நடிப்பது


சூழ்நிலைக்கு

தகுந்தாற்போல்

நடிப்பது


மற்றவர்களை 

கீழ்தரமாக்க

வார்த்தை ஜாலத்தால் 

நடித்து 

உலகை நம்ப

வைப்பது


உள்ளொன்று வைத்து

 புறமொன்று பேசி


உலகில் தான்தான்

சிறந்தவர் போல்

நடிப்பது


தான் தான் உலகில் அனைத்தும் தெரிந்த

அறிவாளி

 என்பது போல்

ஒரு கூட்டத்தை தன்னுடனே வைத்துக் கொள்ள 

நடிப்பது


எத்தனை நடித்தாலும் 


இவ்வுலகில் 

உண்மை 

நேர்மை

ஒழுக்கம் 


இவற்றில் சிறந்து

விளங்குபவர் முன்


ஓர் நாள்  நடிப்பவர்கள்

வெட்கி தலைகுனிந்து 

மண்டியிடுவர்


நிஜ வாழ்க்கையில் 

நடிப்பை ஒதுக்கி


நேர்மையோடு

மற்றவர்க்கு

எடுத்துக்காடடாய்

வாழ்


உலகம் போற்றும்


அனைவருடைய 

மனதிலும்

நீங்காமல் 

வாழ்ந்து

கொண்டிருப்பாய்.


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்