V Sankar poem: நடிப்பதே வாழ்க்கை !

Apr 27, 2026,01:41 PM IST

- வெ.சங்கர்


மானுட வாழ்வின் 

மகத்தானக் கலை 


மனதில் நிற்குமே

 மகிழ்ச்சியான சோலை 


நடிப்பு என்பதே 

 ஈர்க்கும் வலை 


நாடகமே தமிழ்தாயின்

 மூன்றாம் பேரலை 


கவலையை தீர்க்கும்

 கருத்தானச் சுலை


கலையை விரும்பாத

 உள்ளமும் இல்லை 




தொண்டுதொட்டு பேணிவந்த

தொன்மையான நாடகக்கலை 


தொடருது வறுமைக்குள்

 கலைஞனின் நிலை 


இரவினில் அரசனாய்

 அரியணையில் இருப்பான் 


பகலினில் பசிக்குள்

 கேட்பாரற்றுக் கிடப்பான் 


வருமானம் இன்றியே 

 வாழ்வினைத் தொலைப்பான் 


வாழும் காலத்தைக்

 கலைக்காய் இழப்பான் 


சிரிக்கவும் வைப்பான்

 சிந்திக்கவும் செய்வான் 


செல்லாக் காசாய்

 சிதலமடைந்து போவான் 


நிசத்தில் நடிக்கத்தான்

 தெரியாத நடிகன் 


நாடகத்தில் என்றுமே 

அவன் சகலகலாவல்லவன் 


கலைகளின் இளவரசி

 நாடகக் கலையே 


கல்நெஞ்சமும் இளகிடும்

 உந்தன் வலையிலே 


போற்றிக் காத்திடுவோம்

 பொறுப்பான மனிதராய் 


மக்களுக்கான கலையாய்

 தொடுப்போம் ஆயுதமாய் 


(கவிஞர் வெ. சங்கர், கிருஷ்ணகிரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்