Sunday Message: குடும்பத்தின் அஸ்திவாரம் தேவ அன்பு!

Feb 05, 2023,12:54 PM IST
- கோல்டுவின் ஆசிர்

ஐரோப்பாவின் பிரபலமான ஒரு நகரத்தில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்று நவநாகரீக முறையில் கட்டப்பட்டு மிக நேர்த்தியாக காணப்பட்டது. ஆனால் அது யாருக்கும் உபயோகமில்லாமல் அரசாங்கத்தினரால் முத்திரை போடப்பட்டிருந்தது. காரணம் அந்த கட்டிடத்தை கட்டி எழுப்ப ஆரம்பிக்கும் போது ஒருவர் வாங்கிய லஞ்சத்தின் விளைவாக மிக மோசமாக அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள். 

அஸ்திவாரம் உறுதியாக இருக்கிறதா என்று கவனிக்காத பொறியாளர்கள் அதின் மேல் வேகமாக மிக அழகாக கட்டிடத்தை கட்டி எழுப்பிவிட்டனர். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே கட்டிடம் ஆட்டம் கண்டது. அதற்கு காரணம் அதைப் பொறுப்பெடுத்து செய்தவர்களுக்கு உத்தம குணம் இல்லை. தங்கள் உண்மை தன்மையை லஞ்சத்திற்கு விற்று விட்டார்கள். எவ்வளவு பணம் செலவழித்து என்ன பயன்.



அன்பானவர்களே சரியான குடும்ப உறவுகளை கட்டி எழுப்புவதற்கு சரியான அஸ்திவாரம் வேண்டும். அவை கணவன் மனைவியிடம் அன்பு செலுத்துவதும், மனைவி கணவனுக்கு கீழ்படிவதும், பிள்ளைகள் பெற்றோர்க்கு கீழ்படிவதும், பெற்றோர் பிள்ளைகளை கோபமூட்டாதிருப்பதும் ஆகும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி உறவுகளை கெடுக்கும் நிறைய நவின காரியங்கள் உண்டு. அதில் கவனமாக இருந்து குடும்ப அன்பை வளர்க்க வேண்டும். ஆகாத சம்பாஷனைகள் குடும்ப உறவை அதிகமாக கெடுக்கும். இதனால் குடும்பத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும். 

ஆகவே குடும்ப உறவில் ஒவ்வொருவரும் வேத வாசிப்பு, ஜெபம் என்று தேவனுடைய வழி நடத்துதலோடு அன்பிலே கட்டப்பட்டு மாதிரியுள்ள குடும்பமாக கட்டி எழுப்புவோம். 

"தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது".  2 தீமோத்தேயு 2 : 19

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு

news

நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்