நம்மில் பலருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்வதை விட பெரிய விஷயம் நடத்துனரிடம் சில்லறை வாங்குவது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் போது நாம் டிக்கெட் வாங்கிவிட்டு மீதி சில்லறையை நடத்துனரிடம் கேட்டால், இருமா தர்றேன் என்று சொல்லி விட்டு சென்று விடுவார். அவர் நாம் இறங்கும் ஸ்டாப் வருவதற்குள் வருவாரா மாட்டாரா? என்று யோசித்துக்கொண்டே இருப்போம். அவரோ இங்கிட்டும் அங்கிட்டுமாக நடந்து கொண்டே சில்லறை கொடுக்கமாட்டார். அதையும் மீறி கேட்டல் நான் உனக்கு எப்பமா தர்றேன்னு சொன்னேன். நீ தான் சில்லறையை வாங்கிட்டு, மறந்துட்டு என்கிட்ட கேக்குற. முதல்ல நல்லா உன் பர்சை பாருமா என்று சொல்லி விடுவார்.
நமக்கு தெரியும் அவர் தான் சில்லறை தர வேண்டும் என்று, அதை எப்படி அவரிடம் சொல்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருப்போம். என்ன செய்வது என்று தெரியாமல், மனதை தைரியப்படுத்திக் கொண்டு நீங்க தான் எனக்கு சில்லறை தர வேண்டும் என்று கேட்போம். அவரும் 2 நிமிடம் யோசித்து விட்டு சில்லறையை கொடுப்பார்.
அதன்பின்னர், நம்மை திட்டிக்கொண்டே அடுத்து டிக்கெட் வாங்குறவங்க எல்லாம் சில்லறையை எடுத்து வைத்துக்கோங்க. என்னிடம் சில்லறை இல்லை என்று சொல்லி விடுவார். இப்படி பல்வேறு அனுபவங்கள், நம்மில் பலருக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் போது ஏற்பட்டிருக்கும்.

ஆன இங்க ஒரு ஆச்சிரியம் என்னான்னா, சில்லறையை சிரித்து கொண்டே கொடுக்கும் கண்டக்டராம். அதுவும் பயணிகளிடம் அன்பான புன்னகையுடன் அரசு பேருந்தை வழிநடத்தும் நடத்துனர். யார்டா இவருனு தான் கேக்குறீங்க.... இருங்க இருங்க அவரைப் பற்றி தான் நாம இப்ப பார்க்கப்போறோம்.
பயணிகளிடம் அன்பான புன்னகையுடன் அரசு பேருந்தை வழிநடத்தும் பணியை செய்து வருபவர் தான் நடத்துனர் திலீப். நண்பர்களே இன்று சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் அரசு பேருந்தில் பயணம். மிகவும் இளம் வயது நடத்துனர். அனைத்து பயணிகளிடம் அன்புடனும் அரவணைப்புடனும் பேசினார்.
முகத்தில் எப்பொழுதுமே ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. எனக்கே மிகப்பெரிய ஆச்சரியம். ஏனென்றால் பல நடத்துனர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பார்கள். ஆனால் இந்த நடத்துனரோ மிகவும் எளிமையாக அனைவரிடமும் பேசினார். கோபத்தை காண்பிக்கவில்லை. கோபப்படவும் இல்லை. பயணிகளை அன்புடன் வரவேற்று இருக்கைகள் காலியாக இருந்தால் அன்பாக அழைத்து உட்காரச் சொன்னார். சில்லரை கேட்பவர்களுக்கும் அன்புடன் வழங்கினார். வேண்டுமானால் இன்னும் சில்லறை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய் கொடுத்தாலும் சில்லறையை சிரித்துக்கொண்டே வழங்கினார். பல பேருந்துகளில் நடத்துனர்கள் கத்தி சண்டை போடுவார்கள். சில நடத்துனர்கள் போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவிற்கு எல்லாம் கோபங்களை வெளிக் காண்பிப்பார்கள். சர்வீஸ் ஆன, வயது அதிகமான கண்டக்டர்கள் கூட பல நேரங்களில் கோபங்களை வெளிக் காண்பிப்பார்கள்.
ஆனால் வயது மிகவும் இளமையான நடத்துனர் திலீப் மிகவும் அன்புடன் அனைவருடனும் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பயணிகளுடன் பயணிகளாக வரும் அனைவருடனும் நல்ல முறையில் வரவேற்று பேசினார் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது.
கடந்த மாதத்தில் ஒரு நாள் இதே பேருந்தில் சிவகங்கை டூ திருப்பத்தூர் வந்த போதும் இதே நடத்துனர் தீலீபின் முகத்தில் இதே புன்னகையுடன் பேசினார். அன்றே இவரது அன்பான வரவேற்பை மறக்கமுடியவில்லை. இன்றும் அது தொடர்ந்ததால்தான் இந்த பதிவு. அரசு பேருந்தில் இவரது செய்கை மிகவும் அருமையானது.
செய்தி: லேனா, காரைக்குடி.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}