வாக்காளர்களே ரெடியா.. நாளை முதல் கட்ட மக்களவைத் தேர்தல்.. 102 தொகுதிகளில்!

Apr 18, 2024,06:46 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.


2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும்.


தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் சுமார் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவின் போது விளவங்கோடு  சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும். நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 




தேர்தல் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:


நாளை காலை வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரை, 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருக்கும். அவை பின்வருமாறு:


* தேர்தல் தொடர்பான எந்தவித பொதுக்கூட்டத்தையோ, பேரணியையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.


* எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம் தொலைக்காட்சி fm ரேடியோ, வாட்ஸ்சப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.


* பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் ஈர்க்கிற வகையில், எந்தவித இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தை யாராக இருந்தாலும் பரப்புரை செய்யக்கூடாது. இந்த விதிமுறையை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


* கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளி ஆட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் மாநிலங்கள் என்று எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில்தான் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் பெருமை கொள்ளத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்