விஜய்யின் கோட்... சூப்பரான அப்டேட் கொடுத்த இயக்குநர் வி.பி.. ரசிகர்களுக்கு டபுள் ஹேப்பி!!

Aug 21, 2024,04:36 PM IST

சென்னை : விஜய் நடித்துள்ள கோட் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படத்தின் டைரக்டர் வெங்கட் பிரபு இன்று வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. படத்தின் ரிலீசை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் பிறகு அடுத்து யாரை இயக்க போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, விஜய்யின் 68 படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்த படம் அறிவிப்பு வெளியிடப்பட்டது முதலே ரசிகர்களிடம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில், ஏஜிஎஸ் என்டர்டைன்மெட் தயாரிப்பில் உருவாகி உள்ள படத்திற்கு கோட் என பெயரிட்டுள்ளனர். சைன்ஸ் ஃபிக்சிங் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. 




ஸ்நேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு இது ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டிரைலர் என அனைத்தும் செம ஹிட்டாகி உள்ளதால், படமும் வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செப்டம்பர் 5 ம் தேதி கோட் படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் சமயத்தில், புதிய அப்டேட் ஒன்றை வெங்கட் பிரபு இன்று வெளியிட்டுள்ளார். இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில், கோட் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் படத்தின் கவண்டவுன் துவங்கி விட்டதாகவும், இன்னும் 15 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாகவும் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 


விஜய்யின் அரசியல் என்ட்ரி, கட்சி கொடி அறிமுகம் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் கோட் படத்தின் அப்டேட்களும் விஜய்யின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஒரே நேரத்தில் பல ட்ரீட் வந்து கொண்டிருப்பதால் கோட் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும் என இப்போதே சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்