சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தின் 2வது லுக் வெளியாகியுள்ளது. இது நேற்று வெளியான முதல் லுக்கை விட பட்டையைக் கிளப்பும் வகையில் உள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம்தான் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். விஜய்யின் 68வது படம் இது. இந்தப் படத்தின் டைட்டிலும், முதல் லுக்கும் நேற்று வெளியாகின.
படத்தின் டைட்டிலும் சரி, முதல் லுக்கும் சரி ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றன. டைட்டிலே ஆங்கிலத்தில் இருப்பதால் படமும் ஆங்கிலப் படங்களை மிஞ்சும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி இன்று 2வது லுக்கை வெளியிட்டுள்ளனர். என்ன விசேஷம் என்றால் முதல் லுக்கை விட இந்த 2வது லுக் ரொம்ப ஸ்டைலிஷாக, கிராண்டாக உள்ளது. இதிலும் அப்பா, மகன் விஜய் இடம் பெற்றுள்ளனர். முதல் லுக்கில் விமானத்திலிருந்து பாராசூட்டிலிருந்து இறங்கி வருவது போல இருந்தது. 2வது லுக்கில் அதி நவீன பைக்கை அதி வேகமாக ஓட்டுவது போல உள்ளது.
அப்பா பைக் ஓட்ட மகன் பின்னால் அமர்ந்திருக்கிறார். கையில் ஆளுக்கு ஒரு துப்பாக்கி.. தோட்டாக்கள் சீறிப் பாய்கின்றன. இருவரது கண்ணிலும் ஃபயர் தெரிகிறது. ஆனால் ரெண்டு பேருமே ஹெல்மெட் போடலை பாஸ்.. அதை நோட் பண்ணுங்க!
நேற்றைய ஸ்டில்லை விட இன்றைய ஸ்டில் படு சூப்பராக இருக்கிறது.. விஜய் அட்டகாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த லுக்கும் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. லுக்கே இப்படி தெறிக்க விடுதே.. படம் எப்படி இருக்கப் போகிறதோ..!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}