சென்னை: விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் புதிய ஸ்டில் வெளியாகியுள்ளது. பொங்கல் நாளன்று வெளியாகியுள்ள இந்த ஸ்டில் பார்க்கவே படு அட்டகாசமாக இருக்கிறது. படம் குறித்த எதிர்பார்ப்பையும் இது எகிற வைத்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் கதை குறித்த டாக் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட பேர் இணைந்திருப்பது இன்னொரு பரபரப்பாக உள்ளது.
பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன் என ஏகப்பட் பேர் படத்தில் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் லுக், 2வது லுக் வெளியாகி ரசிகர்களை துள்ளலில் ஆழ்த்தியது. படு க்யூட்டான யூத் லுக்கில் ஒரு விஜய்யும், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இன்னொரு விஜய்யும் காட்சி தந்த அந்த இரு ஸ்டில்களும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருந்தன.
இந்த நிலையில் இன்று பொங்கல் திருநாளையொட்டி புதிய ஸ்டில் வந்துள்ளது. இது முந்தைய இரு ஸ்டில்களை விட அட்டகாசமாக உள்ளது. விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகிய நான்கு பேரும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியுடன் படு கூலாக காட்சி அளிக்கின்றனர். குறிப்பாக விஜய் செம லுக்கில் காணப்படுகிறார். முதல் இரு ஸ்டில்களில் வந்த விஜய்யை விட இவர் வேறு மாதிரியான தோற்றத்தில் காட்சி தருகிறார். இதைப் பார்க்கும்போது அப்படீன்னா படத்தில் 3 விஜய்யா அல்லது அப்பா விஜய்யின் பிளாஷ்பேக் காட்சியில் வரும் விஜய்யா இவர் என்ற கேள்வி எழுகிறது.
நான்கு நடிர்களும் செம ஸ்டைலிஷாக இதில் காட்சி தருகின்றனர். இதைப் பார்க்கும்போது போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நான்கு பொங்கல்களையும் ஒரே நாளில் கொண்டாடுவது போல இருக்கிறது. இந்த ஸ்டில் இப்போது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய் செமையாக இருக்கிறார் என்று ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டுள்ளனர்.பொங்கல் நாளன்று ந
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}