மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் இன்று நான்கு மாசி வீதிகளிலும் வலம் வருகிறது.இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி பரவச வெள்ளத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடம் சித்திரை திருவிழா விடுமுறை நாட்களில் வந்ததால், நிறைய பக்தர்கள் கலந்து கொண்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
சித்திரை திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று (மே 08) கோலாகலமாக நடந்தது. சரியாக காலை 8.45 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி என்று 4 மாசி வீதிகளில் வலம் வரும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் மதுரைக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை 6:00 மணி அளவில் நிலையிலிருந்து மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை எழுந்தருளிய பெரிய தேரும் அடுத்தடுத்து கிளம்பியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாசி வீதிகளில் திருத்தேர் ஆடி அசைந்து பவானி வருகிறது. இதன் அழகை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் ஹரஹர சுந்தர.. சம்போ சங்கர சோம சுந்தர மஹாதேவா..
மீனாட்சி சுந்தர.. கல்யாண சுந்தர.. வாரே வா.. என கோஷங்கள் முழங்கி உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் ஆடி அசைந்து வரும் தேரை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஏராளமானோர் தேர்விழாவில் கலந்து கொண்டு வருவதால், அவர்களின் தாகத்தை தணிக்க வழிநெடுகிலும் மோர், தண்ணீர், குளிர்பானங்கள் பந்தல்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
வட இந்தியாவை உலுக்கி எடுக்கும் கன மழை.. துண்டிக்கப்பட்ட காஷ்மீர்.. தவிக்கும் மக்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2025... நல்ல செய்தி தேடி வர போகுது
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
{{comments.comment}}