டெல்லி: எனக்கு வாரிசுகள் இல்லை. இந்த நாட்டின் மக்களே எனது வாரிசுகள். பீகார் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் நான் பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பீகார் மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்கள் மீண்டும் நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போதெல்லாம் வகுப்பு வாதம், ஜாதி வாதம் மற்றும் வாரிசு அரசியல் கலாச்சாரத்தை வளர்க்கிறார்கள். எனக்கு வாரிசுகள் இல்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் பீகார் மக்கள் மீது விழிப்புணர்வை வளர்த்து வந்தனர். இந்த நாட்டின் மக்களே எனது வாரிசுகள். பீகார் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் நான் பாடுபடுவேன்.
ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்த மாற்றத்தை செய்வதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒருபோதும் நினைத்ததில்லை. ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்கள் பண பலத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. அதே நேரத்தில் ஏழைகளும், சாமானியர்களும் பல ஆண்டுகளாக சிறைக்குப் பின்னால் இருக்க வேண்டி இருந்தது. ஏழை, எளிய மக்களுக்கு நீதி வழங்குவதற்காக பழைய தண்டனைச் சட்டத்தை மாற்றி அமைத்து "நியாய சம்ஹிதா" எனப்படும் நீதி சட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.
பீகார் மக்களுக்கு எதிராக திமுகவினர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலைவர்கள் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திய நேரத்தில் காங்கிரஸ் அமைதியாக இருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தி, வாக்காளர்கள் இருவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}