சென்னை: ஏப்ரல் 15ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் சம்பந்தமான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கட்சிகள், கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளிலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இவர்களுக்கு மட்டும் தேர்தல் வேலைகள் என்று இல்லாமல், பள்ளி ஆசிரிகளுக்கும், அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதற்காக, பள்ளிகளுக்கும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், வருகின்ற 23ஆம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளது. இதற்கு இடையில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் வசதிக்காக வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தேர்வுகளுக்காக 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளுக்கு தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அரசு பள்ளிகளுக்கு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}