சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும். வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருவதால், வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபாடு இல்லை. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டு தான் வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு வருவதால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாமலும் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சற்று குறையும் என அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடுமாம். மேலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துமாம். கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 முதல் 37 டிகிரி வரை வெயில் பதிவாகும்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகம் மட்டுமான வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}