சென்னை: தவெக பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு வெற்றி தலைவர் என்று புது பட்டம் சூட்டப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், தவெக கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 1500 பேருக்கு காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார் வழங்கப்பட்டது. தொடர்ந்து 2,500 பேருக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், மிளகு ரசம், தயிர் வடை உள்பட 22 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. பொதுக்குழுக்காக தயார் செய்யப்பட்டிருக்கும் மேடையில் வேலுநாச்சியார், காமராஜர், அம்பேத்கர், பெரியார், அஞ்சலையம்மாள் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 10 மணிக்கு தொடங்கி இந்த கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அதன்படி இன்று வரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் தளபதி என்று அழைத்த நிலையில், இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரல் உடன் அழைப்போம். தளபதி பட்டத்தை இந்த பொதுக்குழுவில் இழந்து வெற்றித் தலைவராக தீர்மானமாக சமர்பிக்கிறேன் என தெரிவித்துள்ளா். இத்தீர்மானம் தொண்டர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}