சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்தின் 2வது பாடல் தொடர்பான அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. இப்படம் வெளியாகி இந்தியா முழுவதிலும் ரூ.500 கோடி வசூலித்த படம். பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி பெற்ற தெலுங்கும் படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாக உள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், நடிகை ராஷ்மிகா இடம்பெறும் இரண்டாவது பாடலின் அறிவிப்பு வீடியோவை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிட இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}