- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி.
அன்பால் இல்லத்தை ஆள வேண்டும்.!
பண்பால் குடும்பம் காக்க வேண்டும.!
இன்பம் துன்பம் பாதியாய் ஏற்கவேண்டும்!
இனிய சொற்கள் இல்லத்தில் என்றும்வேண்டும்.!
நேர்மை வழியில் நடக்க வேண்டும்.!
உண்மை பேசி உயர வேண்டும்.!
மனைவியை என்றும் மதிக்க வேண்டும்.!
மனைவியின் உழைப்பை உணர வேண்டும்.!
கடமை உணர்ந்து உழைக்க வேண்டும்.!
கருணை உள்ளம் என்றும் வேண்டும்.!

கண்ணியம் காத்து வழிநடத்த வேண்டும்.!
கவலை தீர்க்கும் தோழனாக வேண்டும்.!
வீட்டின் சுமையை பகிர்ந்து கொள்ளவேண்டும்.!
விழிப்பார்வையில் அன்பு பொழியவேண்டும்.!
புரிதல் குணம் கொண்டிருக்க வேண்டும்.! நற்
பண்பும் , பொறுமையும் நிறைந்த குணம்வேண்டும்.!
உரிமை தந்து அவள்உயர்வு காணவேண்டும்.!
உண்மை பேசி அவள்உள்ளம் ஆளவேண்டும்.!
மனைவியின் கனவிற்கு கைகோர்க்க வேண்டும்.!
மனைவியின் துன்பம் தீர்க்கும் மருந்தாக வேண்டும்.!
மனம் கவர்ந்த மணாளனாய் இருக்க வேண்டும்.!
காலம் முழுதும் கரம் பிடிக்கவேண்டும்.!
காலமெல்லாம் அன்போடு வாழவேண்டும்.!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு
மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
பாட்டியானாலும் பிரச்சினை!
"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
நான் கம்ப்யூட்டர் கற்ற கதை
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?
{{comments.comment}}