சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் அடியோடு குறைந்து தற்போது கோடை மழை களை கட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மே மாதத்தில் நிலவக்கூடிய அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வெப்பம் தணிந்துள்ளது. இதனால் காலநிலை சாதகமாக நிலவுவதால் மக்கள் குஷியில் உள்ளனர்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாட்டில் 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 6 மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மாலை நேரத்தில் நல்ல மழை பெய்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக மிக கன மழைக்கான 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம், மதுரை மாவட்டம் பேரையூர் ஆகிய இரண்டு ஊர்களில் தலா 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் குமரி மாவட்டம் புத்தன் அணை, ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் வானம் மூடி மூடிக் காணப்படுகிறது. வெயில் பெரிதாக இல்லை. சுட்டெரிக்கும் வெயில் குறைந்து கிளைமேட்டும் சூப்பராக இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}