சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விஜயின் பூத் கமிட்டி மாநாடு, விஜயின் சுற்றுப்பயணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இதில் ஒரு பகுதியாக விக்கிரவாண்டியில் தனது முதல் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார். இந்த மாநாடு அரசியல் வரலாற்றில் சாதனை படைத்ததாகவும் அமைந்துள்ளது.
இதனையடுத்து, 234 தமிழக சட்டமன்ற தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு மாவட்ட செயலாளர்கள் என நியமித்து பல்வேறு கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தார். இதுவரை 6 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, மொத்தம் 114 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பிரச்சனைக்குரிய மாவட்டங்களில் மட்டும் கூடுதல் மாவட்ட செயலாளர்களை நியமனப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கட்சி தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு விழா மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் பொதுக்குழு கூட்டத்தையும் கட்சி சார்பில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக பொதுக்குழு கூட்டம் கைவிடப்பட்டது.
இதனால் ஓராண்டு நிறைவு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்திய தவெக தலைவர் விஜய், அந்த விழாவில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேபோல் பூத் கமிட்டி மாநாடு விரைவில் நடத்தப்படும். பூத் கமிட்டி மாநாடு நடத்தும் போது எங்களுடைய பலம் அப்போது தெரியும் எனவும் கூறியிருந்தார். இதனால் பூத் கமிட்டி மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் இந்த பூத் கமிட்டி மாநாடு ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.விஜய் தலைமை ஏற்கும் இந்த கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழ் கடிதம் மற்றும் கட்சியின் அடையாள அட்டையுடன் வந்து பங்கேற்குமாறு கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்கூட்டம், பூத் கமிட்டி மாநாடு முடிந்த பிறகு விஜயின் சுற்றுப்பயணம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}