சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்தும், பின்னர் குறைந்தும் நிலையற்ற தன்மையில் இருந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. வெள்ளி விலை நேற்றைய விலையை விட இன்று குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சம் தொட்டது தங்கம் விலை. அதன் பின்னர் சவரனுக்கு 2000 வரை குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது. இவ்வாறு நிலையற்ற விலையில் தங்கம் விலை இருந்து வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி, நேற்றைய விலையே இன்றும் தொடர்ந்து காணப்படுகிறது.
நேற்று குறைந்து இருந்த விலையில் தான் இன்று தங்கம் விலை தொடர்கிறது. இந்த விலை வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி அளிப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலையை பொருத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,730 ரூபாயாக உள்ளது.8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,840 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,342 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,736 ஆக உள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து ரூ.100க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 இருந்த விலை இன்று ரூ.1,00,000க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.1.000 குறைந்துள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}