அதிமுகவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லைண்ணே.. அண்ணாமலை அதிரடி!

Sep 21, 2023,08:14 PM IST
கோவை:  அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை வந்த அண்ணாமலை அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக - பாஜக இடையிலான திடீர் பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அண்ணாமலை பேசியதாவது:

அதிமுக பாஜக இடையே எந்த பிரச்னையும் இல்லை. அதேபோல அதிமுக அண்ணாமலை இடையேயும் பிரச்சினை இல்லை. ஒரு பிரச்சினையும் இல்லண்ணே. நான் யாரையும் தவறாக பேசவில்லை. எனது கருத்தில் எந்த மாறுதலும் இல்லை. 



அதிமுக, பாஜக இடையிலே அடிப்படையிலேயே வேறுபாடுகள் இருக்கின்றன. கட்சிகளுக்கிடையே மோதல்கள் வரத்தான் செய்யும். அதற்காக அதிமுக தலைவர்களுடன் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை .

எனக்கும் அதிமுக தலைவருக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி பற்றி அதிமுக கூறிய கருத்துக்கு நான் பதில் அளிக்க முடியாது. எனது அரசியலில் தெளிவாக இருக்கிறேன். எனக்கு தன்மானம் முக்கியம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. இரு கட்சிகளின் கருத்துக்களை ஒன்றிணைக்க முடியாது.

மகளிருகான 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு நாட்களாக விநாயகர் ஊர்வலம் நடப்பதால் இடையூறு விளைவிக்காமல் நான் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இனி மீண்டும் அது தொடரவுள்ளது என்றார் அண்ணாமலை

செல்லூர் ராஜுவும் பல்டி

இதேபோல அண்ணாமலைக்கு எதிராக நாக்கை துண்டிப்போம், நாக்கு அழுகி விடும் என்று ஆவேசம் காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் இரு கட்சிகளிடையேயும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு நாங்க பதிலளித்தோம்.. அவ்வளவுதான் என்று கூறி பல்டி அடித்துள்ளார்.

அத்தோடு நில்லாமல் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும். அதுதான் எங்களது எண்ணமும். அதேபோல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும். அதை பாஜக ஏற்க வேண்டும் என்று கூறினார்.

ஆக, மொத்தம் இந்த சண்டையும் புஸ்வானம்தான் போல!

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்