சென்னை: அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா பட இயக்குனர் சுகுமார் தமிழ் சினிமாவில் அஜிதை வைத்து இயக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் சுகுமார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் முதல் முதலாக தெலுங்கில் ஆர்யா என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கிய புஷ்பா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து, பல கோடி ரூபாய் வசூலில் சாதனை படைத்தது.
அதேபோல் புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2 தி ரூல் படம் சமீபத்தில் வெளியாகி 1800 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து விரைவில் புஷ்பா படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சுகுமார் முதலில் தளபதி விஜய் வைத்து படம் இயக்க ஆசை. பிறகு அஜித் குமாரை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன். தொடர்ந்து மூன்றாவதாக கார்த்திகை எனக்கு மிகவும் பிடிக்கும். காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என கூறினார்.
இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் படத்தின் முதல் நாளை உற்சாகத்துடன் வரவேற்றனர். இப்படம் முதல் நாளில் மட்டும் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியால் ரசிகர்கள் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அஜித் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் விஜய், அஜித், கார்த்தி, ஆகியோரை இயக்க விருப்பம் இருப்பதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இதனால் முதலில் விஜய் வைத்து இயக்க ஆசைப்பட்டு, விஜய் அரசியலுக்கு சென்றதால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. எனவே அநேகமாக அஜித்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பேசப்படுகிறது .
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் அட்லி. இவர் தெலுங்கில் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதேபோல் அல்லு அர்ஜுனனை வைத்து இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்ற புஷ்பா பட சுகுமார் தமிழில் அஜித்தை வைத்து அதிரடி காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}