டெல்லி: கொரோனாவுக்குப் பிறகு உலகம் வேறு மாதிரியான மாற்றங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. கொரோனாவுக்கு முன்பு வழக்கமாக இருந்ததெல்லாம் இன்று வழக்கொழிய ஆரம்பித்து விட்டன. பல புதிய மாற்றங்களை இயல்பானதாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். அந்த வகையில் இன்னொரு புதிய மாற்றத்தை அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் சந்திக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார் லிங்ட்இன் இணை நிறுவனர் ரீட் ஹாப்மேன்.
அது என்ன மாற்றம்?
வேறென்ன இன்த 9 டூ 5 வேலைதான்.. ஒயிட் காலர் ஜாப் என்றும் இதைச் சொல்வோம்.. அதெல்லாம் 2034ம் ஆண்டோடு மலையேறிப் போய் விடும்.. அப்படி ஒரு சிஸ்டமே உலகில் இருக்காது என்று ஹாப்மேன் அதிரடியாக கூறியுள்ளார். அவர் இதற்கு முன்பும் கூட சில முக்கிய மாற்றங்களை முன்கூட்டியே கணித்திருந்தார். அவை நடந்துள்ளன. இப்போது இந்த மாற்றத்தை அவர் கணித்துள்ளார்.
யார் இந்த ஹாப்மேன்?
2003ம் ஆண்டு தனது இரு நண்பர்களோடு இணைந்து லிங்ட்இன் சோசியல் மீடியா தளத்தைத் தொடங்கினார் ஹாப்மேன். பின்னர் இதை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்றுவிட்டார். அதன் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவன போர்டில் இணைந்த ஹாப்மேன், லிங்ட்இன் தளத்தின் செயல்தலைவராக இருக்கிறார்.
உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பம் மிகப் பெரிய அளவில் ஆட்டிப்படைக்கும் என்று பல வருடங்களுக்கு முன்பாகவே கணித்தவர் ஹாப்மேன். இன்று அது உண்மையாகியுள்ளது. நிஜம் எது, பொய் எது என்று தெரியாத அளவுக்கு பல விஷயங்களிலும் ஏஐ ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்டது. போகிற போக்கில் என்னாகுமோ என்று அச்சப்படும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது.
இந்த நிலையில்தான் காலம் காலமாக அலுவலகங்களில் இருந்து வரும் 9 டூ 5 வேலை காலியாகி விடும். அது காலாவதியாகி விடும்.. அது உலகில் எங்குமே இருக்காது என்ற கணிப்பை வெளியிட்டுள்ளார் ஹாப்மேன். இதுகுறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஏஐ தொழில்நுட்பத்தின் புரட்சி காரணமாக அலுவலக நடைமுறைகள் தலைகீழாக மாறப் போவதாக அவர் கணித்துள்ளார்.
காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வந்த பல நடைமுறைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய் விடும் என்று சொல்லியுள்ளார் ஹாபமேன். அதில் ஒன்றுதான் இந்த 9 டூ 5 ஜாப். 2034ம் ஆண்டோடு இது அழிந்து விடும் என்றும் அவர் சொல்லியுள்ளார். அவர் கூறியுள்ள செத்துப் போய்ரும என்ற வார்த்தைதான் ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் முழு நேர ஊழியர்கள் என்று இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள்.. ப்ரீலான்சர்கள் அதிகரித்து விடுவார்கள். அதேபோல பயோடேட்டா என்ற ஒன்றும் இல்லாமல் போய் விடும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இனிமேல் ஒரு நபர் ஒரு இடத்தில் மட்டும் வேலை பார்க்க மாட்டார். அவர் பல நிறுவனங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் நிலை வரும். எனவே வேலை பாதுகாப்பு என்பது இனி போகப் போக குறைந்து விடும். இந்த வேலை இல்லாவிட்டால் அந்த வேலை என்ற நிலை மாறி இந்த வேலையும் பார்ப்போம்.. அந்த வேலையும் பார்ப்போம்.. எந்த வேலையும் பார்ப்போம் என்ற நிலைக்கு பணியாளர்கள் மாறி விடுவார்கள் என்று சொல்கிறார் ஹாப்மேன்.
சாட்ஜிபிடி வருவதற்கு முன்பே ஏஐ குறித்த எச்சரிக்கையை 1997ம் ஆண்டே கொடுத்தவர் ஹாப்மேன் என்பதால், அவர் இப்போது கூறியுள்ளதும் கவனம் ஈர்த்துள்ளது.
மாற்றம் ஒன்றே மாறாதது..!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}